January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யத் தீர்மானம்!

தாய்லாந்திலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான எரிவாயுவை வழங்குவதற்கு தாய்லாந்தின் சியம் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து நிறுவனம் விநியோகக் கட்டணத்தில் 10 வீத குறைந்த கட்டணத்துடன் எரிவாயுவை வழங்க இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கையில் எரிவாயு விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.