January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நிதி மற்றும் சமுர்த்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி மே மாதம் தொடக்கம் ஜுலை மாதம் வரையில் இந்தக் கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி, வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளை பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.