January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டது!

Rice Common Image

இலங்கையில் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை நிர்ணயித்துள்ளது.

ஏப்ரல் 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கமைய வௌ்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ கிராமின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வௌ்ளை மற்றும் சிவப்பு சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 230 ஆகவும், கீரி சம்பா ஒரு கிலோ கிராமின் விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் நிர்ணய விலையை விடவும் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் நோக்கில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.