November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவர் ஒரே கட்சியில்?

புதிய பிரதமரை நியமிக்க இடமளித்தவிட்டு தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ எவ்வேளையிலும் பதவி விலகலாம் என்று கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 4 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பிரதமர் பதவி விலகலாம் என்று கூறப்படுகின்றன.

இதன்படி பதவி விலகும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சி பக்கத்திற்கு செல்லலாம் என்றும், இதன்போது எதிர்க்கட்சித் தரப்பில் அவருக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவை காட்டி அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு நடக்குமாக இருந்தால் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்தவர்களாகவே இருப்பர்.

இதேவேளை தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முயற்சிகள் இடம்பெறுவதாகவும், ஆனால் தான் எதனையும் விட்டுக்கொடுக்க தயாராகவே இருக்கின்றேன் என்றும் சஜித் பிரேமதாச மேதின கூட்டத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.