January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைக்க இணக்கம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் கட்சிகளுக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் கொழும்பில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதன்போது இடைக்கால அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் இதற்கு சுயாதீன அணியினர் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் வர மறுக்கும் நிலையில் பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் கட்சிகளை இணைத்து இந்த புதிய அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரதமர் பதவி மற்றும் அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இங்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இந்த சந்திப்பில் பொதுஜன பெரமுன சார்பில் பஸில் ராஜபக்‌ஷ, சாகர காரியவசம் ஆகியோரும் சுயாதீன அணிகள் சார்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.