எந்வொரு அரசியல்வாதிக்கும் இனி என்னை சந்திக்க அனுமதி வழங்கப்படாது என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக பௌத்த பீடங்களினால் அண்மையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இடைக்கால அரசாங்கத்தை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் அவர்களினால் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
எனினும் பொறுப்பானவர்கள் இதுவரையில் அதற்கு பதிலளிக்கவில்லை என்று மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.