January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜபக்‌ஷ – இ.தொ.கா உறவு துண்டிக்கப்பட்டது!

ராஜபக்‌ஷக்களுடன் 15 வருடங்காக தொடர்ந்த உறவை இன்றுடன் முடித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கொட்டகலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

அன்று மக்கள் நம்பியதை போன்றே நாங்களும் அவர்களை நம்பினோம் என்று ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இப்போது மக்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கின்றோம். மலையகத்திற்கான பல்கலைக்கழகம் வேண்டும் என்றே கேட்டோம் அதனை தரவில்லை. அதனை தொடர்ந்தே அரசாங்கத்தில் இருந்து விலகினோம் என்றார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே செயற்படுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.