January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுரவின் அறிவிப்பால் பரபரப்பாகும் அரசியல் களம்!

”சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்பாக இருக்கவும்” என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியாளர்கள் உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகள் தொடர்பான முக்கிய தகவல்களை அனுரகுமார திஸாநாயக்க மே 3 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு அவர் வெளியிடும் தகவல்கள் இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும் கூறப்படுகின்றது.

அவர் என்ன தகவலை வெளியிடப் போகின்றார் என்று ஆவலுடன் காத்திருப்பதாக பலரும் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.