January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்தின் மேடை இல்லாத மேதினம்!

சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.

எனினும் அரசாங்கத்தின் தலைமை கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதினக் கூட்டத்தை நடத்தவில்லை.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சிகள் சில ஒன்றிணைந்து நுகேகொட நகரில் மேதினக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ள போதும், அரசாங்கமாக எங்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்யவில்லை.

இதன்படி ஜனாதிபதியோ, பிரதமரோ இன்று எந்தவொரு மேதின கூட்ட மேடையிலும் ஏற மாட்டார்கள் என்றே கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வரும் நிலையிலேயே அரசாங்கம் மேதினக் கூட்டத்தை தவிர்த்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்துள்ள மே தின கூட்டம் அதன் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு 7 பகுதியில் நடைபெறவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடக்கவுள்ளது.

அதேபோன்று ஜே.வி.பியின் கூட்டம் கொழும்பு பி.ஆர்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் வழமைப்போன்று மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.