புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்ததாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.