November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியத் தூதுவருடன் சுயாதீன எம்.பிக்கள் குழு சந்திப்பு!

அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே சந்தத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் இந்தியத் தூதுவருக்கு சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் தெளிவுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கைக்கான ஆதரவை இந்தியா தொடர்ந்தும் வழங்கும் என்றும், இலங்கை மக்களுடன் என்றும் துணைநிற்போம் என்றும் தூதுவர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த வாரத்தில் இந்தக் குழுவினர் சீனத் தூதுவரை சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.