அரசாங்கம் என்ன தீர்வுகளை முன்வைத்தாலும் நாட்டின் நெருக்கடி நிலைமை எதிர்வரும் மாதங்களில் மேலும் மோசமடையும் அபாயமே காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு கடன் சுமை, டொலர் பற்றாக்குறை, வருமானம் குறைந்தமை மற்றும் செலவுகள் அதிகரித்துள்ளமையே காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கடன் சுமைகளுக்கு மின்சார சபை, பெட்ரோலிக் கூட்டுத்தாபனம் போன்ற அரச கூட்டுத்தாபனங்கள் காரணமாக அமைந்துள்ள என்று ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமையில் கடன்களை மீளச் செலுத்தக் கூடிய முறையான பொறிமுறைகளை தயாரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.