ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் அந்தப் பிரேரணையை சபையில் முன்வைக்க சுமந்திரன் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 113 பேரின் ஆதரவு கிடைத்தாலும் சட்டப்படி அதன்மூலம் ஜனாதிபதியை பதவி விலக்க முடியாது.
எனினும் ஜனாதிபதி மீதான நம்பிக்கையை பாராளுமன்றம் இழந்துள்ள என்பதனை எடுத்துக்காட்டி, ஜனாதிபதியை பதவி விலகுமாறு மேலும் அழுத்தம் கொடுக்க முடியுமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.