அரசாங்கத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு அரச மற்றும் தனியார் துறைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
அரச மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த ஆயிரம் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு இடமளித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டுமென வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் ஆசிரியர்கள், சுகாதரம், துறைமுகம் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள், அரச நிர்வாக பிரிவினர், அரச மற்றும் தனியார் வங்கிகள் என பலரும் இணைந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.