ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்டவர்களை கைது செய்யுமாறு கேகாலை நீதவானால் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கேகாலை நீதவான் வாசனா நவரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்படி துப்பாக்கிச் சூட்டுக்கு கட்டளையிட்ட கேகாலை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
எரிபொருள் தொடர்பான பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு ரம்புக்கனையில் 20 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சாமிந்த லக்ஷான் என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார்.
துப்பாக்கி பிரயோகத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது.