சர்வ கட்சிகளின் அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் 29 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்கு வருமாறு, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை விலகிய பின்னர் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க எதிர்பார்ப்பதாகவும், இதன்போது அதற்கு தலைமை தாங்குவது யார்?, அதன் காலப்பகுதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கட்சிகளுடனான கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.