January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏப்ரல் 28 நாடு முடங்கும்?

அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை முழுவதும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச, தனியார் துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஏப்ரல் 28 ஆம் திகதி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மக்கள் கோரிக்கைகளுக்கு தலை சாய்த்து அரசாங்கம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் பல இணைந்துகொள்ளவுள்ளன.

ஆடைத் தொழிற்சாலை நிறுவனங்கள் பலவும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

இதேவேளை ஆசிரியர் சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்துகொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ரயில்வே, இ.போ.ச மற்றும் தனியார் பஸ் சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.