January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச நிறுவனங்களுக்கு செலவுக் கட்டுப்பாடு!

அரச நிறுவனங்களின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சினால் அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட சுற்றறிக்கையொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஆரம்பிக்கப்படவிருந்த அனைத்து திட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படாத கொடுப்பனவுகள், உதவித்தொகை வழங்குதல் என்பனவற்றை நிறுத்துமாறும் அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன். எரிபொருள் மற்றும் தொலைபேசி கொடுப்பனவுகளை கட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.