January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சுங், யுத்த காலத்தில் வடக்கில் காணாமல் போனோரின் உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, உள்நாட்டுப் போரில் தமது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிய இரண்டின் அவசியத்தையும் நினைவூட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை திங்கட்கிழமை சந்தித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், டெலொ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து வடக்கு மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளனர்.