January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பிரதமர் பதவி விலகக் கூடாது”: தீர்மானம் நிறைவேற்றம்!

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்கத்தினர் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பிரதமர், அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சங்கத்தினருக்கு இடையில் அலரிமாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற மகிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் பிரதமராக கடமையாற்றுவது அத்தியாவசியமானது என மாகாண சபை உறுப்பினர்கள் சங்க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

69 இலட்சம் பெரும்பான்மை மக்கள் இன்னமும் மகிந்த ராஜபக்‌ஷவுடன் இருப்பதாகவும், அவர்களது மௌனம் காரணமாக சிறு குழுவின் போராட்டத்திற்கு சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களினாலும் விளம்பரம் கிடைத்தமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.