January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது!

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமை எரிவாயு விலை ஏப்ரல் 26 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கமைய 12.5 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஒன்று 2,185 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன் புதிய விலை 4,860 ரூபாவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2.3 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஒன்று 404 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 910 ரூபாவுக்கும், 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஒன்று 874 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 1945 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.