November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கவில்லை”

அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை இழக்கவில்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வேளையிலும் அதனை உறுதிப்படுத்த தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் 113 என்ற பெரும்பான்மையை ஆசனங்களை இழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ள நிலையிலேயே சாகர காரியவசம் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 120ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தயாராக இருப்பதாகவும், இதனால் பதவி விலகுவதற்கு பிரதமருக்கு ஒருவார கால அவகாசம் வழங்குவதாகவும் கம்மன்பில தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.