January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலில் இறந்தவர்களுக்காக வத்திக்கானில் விசேட திருப்பலி

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்காக வத்திக்கான் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த திருப்பலி பூஜையில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இணைந்து கொண்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 56 பேர் கொண்ட குழுவினர் பாப்பரசரை சந்திப்பதற்காக வத்திக்கான் சென்றுள்ளனர்.

கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையைில் கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு கட்டுவாபிட்டி மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களும் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அங்கு சென்றுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னும் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாப்பரசரின் அழைப்பை ஏற்று இவர்கள் வத்திக்கான் சென்றனர்.
இதன்படி இன்றைய தினம் பாப்பரசரை சந்திப்பதற்கு முன்னர் வத்திக்கான் புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.