January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிராக 120 எம்பிக்கள்: பிரதமருக்கு ஒருவார கால அவகாசம்!

காலம் தாழ்த்தாது பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் என்று அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுயாதீன அணியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி பிரதமருக்கு ஒருவார காலம் அவகாசம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 பேரின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் இதனால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க இடமளித்துவிட்டு தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.