இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள பதில் கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு துரித கதியில் நடவடிக்கை எடுக்குமாறு மல்வத்து, அஸ்கிரிய பீடங்கள் உள்ளிட்ட பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
அந்தக் கடிதத்திற்கு நேற்றைய தினம் ஜனாதிபதி பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.