January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் வீட்டுக்கு முன்னால் பதற்றம்!

Photo: Facebook/ Aragalaya 

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு விஜேராம மாவத்தை பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியை நடத்துவதற்கே ஆரம்பத்தில் மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எனினும் காலிமுகத்திடல் பகுதிக்கு செல்ல முடியாதவாறு வீதித் தடைகளை போட்டும் மற்றும் நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்றும் பொலிஸார் பேரணியை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இவ்வாறான நிலைமையில் மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இருந்து மருதானை ஊடாக பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.