அதிபர், ஆசிரியர் சங்கங்கள் ஏப்ரல் 25 ஆம் திகதி சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றம், பஸ் கட்டண உயர்வு மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்கள் உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்தில் 30 அதிபர் ஆசிரியர் சங்கங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக ஆசியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.