January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் இரும்புக் கம்பிகளால் அடைக்கப்பட்ட வீதிகள்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நண்பகல் 12 மணிக்கு பல்கலைக்கழக மாணவர்களை ஒன்று கூடுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பொறுத்தது போது, அரசாங்கத்தை விரட்டியடிக்க அணி திரள்வோம் என்ற தொனிப் பொருளில் அவர்கள் இந்தப் பேரணியை முன்னெடுக்கவுள்ளனர்.

காலிமுகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்துடன் இன்று பிற்பகல் இவர்கள் இணைந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வரும் பொலிஸார், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் பகுதிக்கு செல்லும் அனைத்து வீதிகளையும் வீதித் தடைகள் கொண்டு மூடியுள்ளனர்.

எவருக்கும் அந்த வீதித் தடைகளை தாண்டி செல்ல முடியாதவாறு இடைவெளிகள் இன்றி அந்த தடைகள் போடப்பட்டுள்ளன.

எனினும் திட்டமிட்டப்படி தமது போராட்டம் தொடரும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.