January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பால் மா விலைகளை மேலும் அதிகரிக்க முயற்சி!

பால் மா விலைகளை மீண்டும் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்லும் நிலையில் அதற்கு ஏற்றால் போன்று விலை அதிகரிப்பை செய்ய வேண்டியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.

இதன்படி எதிர்வரும் வாரங்களில் பால் மா விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

தற்போது சந்தையில் பால் மா கிலோ பக்கட் ஒன்று 1945 ரூபாவுக்கும், 400 கிராம் பால் மா பக்கட் ஒன்று 800 ரூபாவுக்கும் விற்பனையாகின்றன.