இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையால் வங்கிகள் சில வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வங்கியாளர்களின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது நாடும், அரசாங்கமும் ஸ்தீரமற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.