January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நான் நலமாகவே இருக்கின்றேன்”

தான் வழமை போன்றே நலத்துடனேயே இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நோயாளியை பார்ப்பதற்கேனும் தான் இத்தினங்களில் வைத்தியசாலைக்கு செல்லவில்லை எனத் தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டு சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பிரதமர் நோய்வாய்ப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும் என்று பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.