நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸதெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கள்வர் கும்பலுடனோ அல்லது ராஜபக்ஷக்களுடன் இணைந்தோ இடைக்கால அரசாங்கத்தை அமைக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் எம்பிலிப்பிட்டி நகரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
150 ஆசனங்களுடன் இரண்டரை வருடங்களாக மரணப்படுக்கையில் இருந்த அரசாங்கம், இப்போது கூட்டணி ஆட்சிக்கு வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதுடன் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளுமாறு கூறுவதாகவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், யாருடைய மனதையும் கெடுக்கும் நோக்கில் திருட்டு அரசாங்கத்தை அமைக்க நாங்கள் தயாராக இல்லை.மக்கள் அபிப்பிராயத்தின் மூலம் ஆட்சி அமைக்கவே தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.