சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு பூர்த்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதனால் நாணய நிதியத்தின் உதவிகளை உடனடியாக பொற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள நிதி அமைச்சர், அங்கிருந்து சூம் தொழில்நுட்பவம் ஊடாக கொழும்பிலுள்ள ஊடாகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் நமது நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ”நாட்டில், ஜனாதிபதியுடன் பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் அவற்றை காட்ட வேண்டிய நேரம் இதுவல்ல, இது பழிவாங்கும் நேரம் இல்லை. இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.