அண்மையில் பதவியேற்ற பிரபல அமைச்சர் ஒருவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற நாலக கொடஹேவாவே இவ்வாறு பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக முஜிபூர் ரஹ்மான் கூறியுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி அவர் ஜனாதிபதிக்கு தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளதாகவும், ஆனால் தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதால் அந்தக் கடிதத்தை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதாக முஜிபூர் ரஹ்மான் சபையில் தெரிவித்துள்ளார்.