சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தலை லிட்ரோ நிறுவனம் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை எரிவாயு சிலிண்டர் 2675 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை சமையல் எரிவாயுக்கு நாட்டில் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
ஏப்ரல் 25 ஆம் திகதி வரையில் எரிவாயு விநியோகம் இருக்காது என்று லிட்ரோ ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.