அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாரளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த யோசனையை சபாநயரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகரை சந்தித்து அவர்கள் தமது யோசனை வரைபை சமர்பித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜனபெரமுன சுதந்திரக்கட்சி மற்றும் 11 கட்சிகளை சேர்ந்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த யோசனைகளை கையளித்துள்ளனர்.
20 ஆவது திருத்தத்தை இல்லாது செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலேயே இந்த 21 ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியினால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.