November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மகிந்தவை அசைக்க முடியாது”: தீர்மானம் நிறைவேற்றம்

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கு ஆளும் கட்சி குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கத்தை பலமானதாக கொண்டுசெல்ல வேண்டும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் யோசனையை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்க வேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றும் அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.