
இலங்கையில் பொது இடங்களில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் நாட்டில் பொது இடங்களிலும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் அது தொடர்பான சட்டத்தை தளர்த்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்படி பொதுப் போக்குவரத்துகள் மற்றும் உள்ளக ஒன்றுகூடல்கள் தவிர்ந்த மற்றைய இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டயாமில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் இன்றைய தினம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சின் பணிப்பாளர், மக்கள் வெளியிடங்களில் அதிகளவில் ஒன்றுகூடுவதால் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.