நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனையை எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார, இந்த யோசனையை இன்று சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதிக்கு பதிலாக ஜனநாயக முறைமையில் பதிலளிக்கக் கூடிய வகையிலான பிரதமரை கொண்ட பாராளுமன்ற முறைமைக்குள் இதன்மூலம் செல்ல முடியுமாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
இதனை செயற்படுத்த 225 பேரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.