இலங்கைக்கு அவசர உதவியை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்காக இந்த உதவியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவருடன் சந்திப்பை நடத்தியுள்ளனர்.
இதன்போது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.