November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் பவுசர்களுக்கு விசேட பாதுகாப்பு!

எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியத்தில் இருந்து செல்லும் எரிபொருள் பவுசர் மற்றும் எரிபொருள் ரயில்களுக்கு விமானப் படையின் பாதுகாப்பு வழங்கப்பபடும் என்று அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் வீதிகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதால் எரிபொருளை ஏற்றிச் செல்வதற்கு பவுசர் உரிமையாளர்கள் அச்சம் வெளியிடும் நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பகுதியில் 33,000 லீட்டர் எரிபொருளுடன் இருந்த பவுசருக்கு தீ வைக்க முயன்ற போதே அங்கு பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.