November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறும் முஸ்லிம் எம்.பிக்கள்

அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதற்கு மூன்று முஸ்லிம் எம்.பிக்கள் தீர்மானித்துள்ளனர்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்த பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்றைய தினம் சபையில் அறிவித்தார்.

நாட்டின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் எடுத்துக்கூறியும் அதனை செவிமடுக்காமல் அரசாங்கம் நாட்டு மக்களை கஷ்டத்திற்குள் கொண்டு செல்வதாக பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.