ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக தன்னிடம் கூறியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கூறியதாக தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை சபையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது சபாநாயகர், சமூக வலைத்தளங்களில் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக என்னிடம் கூறியுள்ளதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை. 113 பேருடன் அந்த சென்றால் அரசாங்கத்தை வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறியதாகவே நான் தெரிவித்திருந்தேன் என்று குறிப்பிட்டார்.
இவ்வேளையில் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நீங்கள் பொய் கூறுகின்றீர்கள். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூறியதை கூறவில்லை என்று கூறுவீர்களாக இருந்தால் உங்களை நாங்கள் பொய்யன் என்றே கூற வேண்டிவரும் என்றார்.
இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது. இருவரும் நீங்களே பொய்யன் என்று ஒருவரை ஒருவர் கூறிக்கொண்டனர்.
இவ்வேளையில் குறிப்பிட்ட சபாநாயகர், நான் கூறியதை நீங்கள் தவறான வகையில் அர்த்தப்படுத்தியுள்ளீர்கள் என்றார்.
Video; https://fb.watch/cvK98CQI2T/