பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி பதவி விலகுவதற்கு தயாராக உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
”இந்த சபையில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறினால், அதற்கு அவர் தயாராக இருக்கின்றார் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கூறியுள்ளார். இதன்படி சபாநாயகர் இடமளித்தால் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் ஏகமனதாக அந்த கோரிக்கையை விடுக்கத் தயாராகவே உள்ளோம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்துள்ளார்.