எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நாடு முழுவதும் வீதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் ரம்புக்கனை பகுதியில் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இன்று காலை முதல் 15 மணித்தியாலங்களுக்கும் மேலாக ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வேளையில் பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடிக்க முயன்றுள்ளனர்.
இதன்போது அங்கு பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு பொலிஸார் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வேளையில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அமைதியின்மையின் போது மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கேகாலை மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நாடு முழுவதும் பிரதான நகரங்களில் வீதிகளை மறித்து தொடர்ந்தும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
Patients admitted with gunshot wounds in Rambukkana. #SriLanka #SriLankaprotest #SrilankaCrisis #GoHomeGota2020 pic.twitter.com/32Vz7jzwP6
— Ashanthi Warunasuriya (@ashanthi_w) April 19, 2022