November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பஸ் கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது!

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அனைத்து பஸ் கட்டணங்களும் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை ஆரம்பக் கட்டணத்தை 27 ரூபாவாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.