ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.
இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடிய போது, அவர்கள் எதிர்க்கட்சி பக்கத்திற்கு சென்று அமர்ந்தனர்.
இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் தனி அணியாக எதிர்க்கட்சியில் செயற்படவுள்ளனர்.