May 13, 2025 21:39:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 40 ரூபாவாக உயர்கிறது?

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இதன்படி ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று முதல் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் பல இடங்களில் தனியார் பஸ் சங்கங்கள் சேவையில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் குறைந்தளவான தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன.