Photo: Facebook/ traveler1st
எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து இலங்கை முழுவதும் பல இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலி, மாத்தறை, கம்பளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, சிலாபம், திகன, மத்துகம உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வீதிகளை மறித்து இவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதால், அந்த வீதிகளின் ஊடான போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 84 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோல் 90 ரூபாவினாலும், ஒடோ டீசல் 113 ரூபாவினாலும், சூப்பர் டீசல் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுள்ளது.
இந்தநிலையிலேயே மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கின்றனர்.