February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரியந்த குமார படுகொலை வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை!

இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 7 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த பிரியந்த குமார, 2021 டிசம்பர் 3 ஆம் திகதி வன்முறைக் கும்பலொன்றினால் அடித்தும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பலரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதன்படி அவர்களுக்கு எதிரான வழக்கில் 13 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்கள் புரிந்த குற்றங்களின் அடிப்படையில் 6 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.